சிறுமிக்குப் பாலியல் தொல்லை: கேன் வாட்டர் தொழிலாளி கைது

காரைக்காலில் வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் நவாஸ்கான். இவர் தனியார்…

காரைக்காலில் வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் நவாஸ்கான். இவர் தனியார் குடிநீர் வாட்டர் கேன் நிறுவனத்தில் வாட்டர் கேன்களை டெலிவரி செய்யும் பணியைச் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், காரைக்கால் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வாட்டர் கேன் டெலிவரி செய்ய சென்றுள்ளார். அப்போது, அந்த வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்த நவாஸ்கான் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரைத் தொடர்ந்து நகர காவல் நிலைய போலீஸார், புதுச்சேரியில் பதுங்கியிருந்த நவாஸ்கானை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர், நவாஸ்கானை காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.