ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – முதியவர் கைது!

தென்காசியில் ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள அருகே மைலப்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவர் டியூசனுக்கு சென்றபோது சில நாட்களாக அதிக சோர்வாக காணப்பட்டுள்ளார்.

இது குறித்து சக மாணவிகள் கேட்டபோது மயிலப்புரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த 68 வயது டெய்லர் முருகன் பல நாட்களாக தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக சிறுமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில்
ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.