முக்கியச் செய்திகள் தமிழகம்

சேது சமுத்திர திட்டம்; பேரவையில் அனைத்து கட்சிகள் ஆதரவு

சேது சமுத்திர திட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் சட்டப்பேரவையில் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை காங்கிரஸ், பாஜக, தவாக, சிபிஎம்,  உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து பேசின.

அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், சேது சமுத்திர திட்டத்தால் மீனவ மக்கள் பாதிக்கப்படுவதாக அவர்களின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கின்றனர். மக்களுக்கு பயனளிக்க கூடிய எந்த திட்டமாக இருந்தாலும் அதிமுக ஆதரிக்கும் என்றார்.

காங்கிரஸ் உறுப்பினர் செல்வ பெருந்தகை பேசுகையில், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்த போது சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது உள்ள பாஜக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தாவிட்டாலும் 2024ல் காங்கிரஸ் ஆட்சியமைத்து திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறினார்.

பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், சேது சமுத்திர திட்டம் வருமேயானால் எங்களை விட யாரும் அதிக மகிழ்ச்சி அடைய முடியாது. தெய்வமாக வழிபடும் ராமர் கால் தட பாதைக்கு எவ்வித பாதிப்பும் இல்லாதவாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசுகையில், சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தினால், கடலோர பாதுகாப்பும் கப்பல் போக்குவரத்தும் அதிகரிக்கும். பவளப்பாறைகள் பாதிக்கப்படும் என்றாலும் பொருளாதார ரீதியாக இந்த திட்டம் பலனளிக்கும் என்றார்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் பேசுகையில், கடல் பசுக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்பதால் யாருக்கும் எவ்வித பாதிப்புமின்றி இத்திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கொங்கு மக்கள் கட்சி உறுப்பினர் ஈஸ்வரன்,  கருணாநிதி முயற்சி செய்த போதே இந்த திட்டத்தை செயல்படுத்தியிருந்தால், இந்நேரம் 40 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைத்திருக்கும் என்று கூறினார்.

சிபிஎம் கட்சியின் உறுப்பினர் நாகை மாலி, தென் தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கனவான இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு முழு ஆதரவு  அளிப்பதாக தெரிவித்தார்.

சி.பி.ஐ உறுப்பினர் மாரிமுத்து, ராமரின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடுவோரும் மூட நம்பிக்கை கொண்டோரும் இத்திட்டத்திற்கு தடையை ஏற்படுத்தினார்கள். திட்டம் நிறைவேற்றப்பட்டால் சர்வதேச நாடுகளுடன் உறவுகள் மேம்படும் என்றார்.

மதிமுகவின் சதன் திருமலைக்குமார், சேது சமுத்திர திட்டம் நிறைவேறினால் தூத்துக்குடி துறைமுகம் சிங்கப்பூர் துறைமுகம் போல உலகப்புகழ் துறைமுகமாக மாறும் என்று கூறினார்.

விசிக உறுப்பினர் ஆளூர் ஷாநாவாஸ், நல்ல திட்டங்களை தமிழ்நாடு ஒரு போதும் எதிர்த்ததில்லை என்பதற்கு உதாரணம் எய்ம்ஸ் மருத்துவமனையும், தற்போது தீர்மானம் கொண்டு வந்துள்ள இந்த சேது சமுத்திர திட்டமும் தான் என்று கூறினார்.

 

 

11. தங்கம் தென்னரசு, திமுக – நவீன காலத்தில் கடல் வாணிபம் செழிக்க வேண்டுமென்றால் இந்த சேது சமுத்திர திட்டம் மிக முக்கியமான ஒன்று. புதிய தொழில் முதலீடுகள் வர இந்த திட்டம் மிக முக்கியமானதாக இருக்கும்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விரைவில் இபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பு – வி.கே.சசிகலா திட்டம்

G SaravanaKumar

548 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கம்!

Web Editor

மது ஒழிப்பில் திமுக, அதிமுக தோல்வி- அன்புமணி ராமதாஸ்

G SaravanaKumar