விவசாயி வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் விஜய்!

முதலமைச்சர் ஜோசப் விஜய் மேட்டூரில் இருந்து சென்னை திரும்பும்போது விவசாயி வீட்டிற்கு சென்று வேளாண் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்ற ஜோசப் விஜய், முதல்முறையாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் 45 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.

இந்த நிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மேட்டூரில் இருந்து சென்னை திரும்பும்போது விவசாயி வீட்டிற்கு சென்றார். சேலம் மாவட்டம் சின்னக்காவூரில் உள்ள விவசாயி வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்ற போது அங்கிருந்த மூதாட்ட முதலமைச்சர் விஜயின் கையை பிடித்து அழைத்து சென்றார்.

அப்போது முதலமைச்சர் விஜய், வேளாண் பணிகள் குறித்து விவசாயியிடம் கேட்டறிந்தார். சின்னக்காவூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளையும் அவர் கேட்டறிந்தார்.,

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.