முக்கியச் செய்திகள் விளையாட்டு

2வது ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டி20 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் கடந்த 10ம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்கியது. இதில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி விராட்கோலியின் சதம் மற்றும் சுப்மான் கில், ரோகித் சர்மா ஆகியோரது அரை சதத்தால் 373 ரன்கள் குவித்தனர்.

முதலாவது ஒருநாள் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் இலங்கை அணி தோல்வியை தழுவியது. 2வது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை கைப்பற்றும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும். எனவே இந்த போட்டியை வெல்லும் முனைப்பில் இலங்கை அணியும், இந்த தொடரை கைப்பற்றும் நோக்கில் இந்திய அணியும் உள்ளதால் இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

இரண்டாவது ஒரு நாள் போட்டி டாஸ் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதனாத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞரை தேடுகிறது போலீஸ்!

Halley Karthik

உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இன்று பதவியேற்பு

G SaravanaKumar

தன் மீதான வழக்குகளை சிம்லாவுக்கு மாற்றக்கோரி கங்கனா ரனாவத் மனு

G SaravanaKumar