மதுரை கோயில்களில் நடக்கும் தொடர் திருட்டு

மதுரை அருகே கோயிலில் இருந்த முருகன் மற்றும் தெய்வானை சிலைகள் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மதுரை – திருச்சி நெடுஞ்சாலையில் முத்து மாரியம்மன் மற்றும் ஐயப்பன் கோவில்கள் அமைந்துள்ளன. முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் கடந்த…

மதுரை அருகே கோயிலில் இருந்த முருகன் மற்றும் தெய்வானை சிலைகள் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

மதுரை – திருச்சி நெடுஞ்சாலையில் முத்து மாரியம்மன் மற்றும் ஐயப்பன் கோவில்கள் அமைந்துள்ளன. முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 9ஆம் தேதி பூஜை அறை உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 120 கிலோ பித்தளைப் பொருட்கள் திருடப்பட்டதாகக் கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து நேற்று இரவு கோவிலில் மற்றொரு அறையில் வைக்கப்பட்டிருந்த முருகன் மற்றும் தெய்வானையின் வெண்கல சிலைகள் திருடப்பட்டதாக இன்று மாலை காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி மேற்கொண்டனர். மேலும் கோவிலில் இரு குழுவினருக்குஇடையே ஏதேனும் பிரச்சனைகள் இருந்ததால் இந்த சம்பவம் நடைபெறுகிறதா அல்லது கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.