முக்கியச் செய்திகள் தமிழகம்

2,200 கி.மீ மாநில நெடுஞ்சாலை – திட்டத்திற்கு அனுமதி

அடுத்த பத்து ஆண்டுகளில் இரண்டாயிரத்து 200 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள், நான்கு வழிச்சாலைகளாக மாற்றும் திட்டத்திற்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், மாவட்ட தலைமையிடங்கள் மற்றும் தாலுக்கா தலைமையிடங்களை இணைக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 2 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றும் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 6 ஆயிரத்து 700 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள், இரண்டு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு அகலப்படுத்தப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக்கம் செய்ய திட்டமிட்ட சாலைகளில் ஏற்கனவே தரைப்பாலம் இருந்தால் அவைகள் உயர்மட்ட பாலமாக மாற்றப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Advertisement:
SHARE

Related posts

பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை

Saravana Kumar

சிறுமிகளை கடத்தி திருமணம் செய்ததாக இருவர் கைது

Jeba Arul Robinson

கிராம உதவியாளர் தற்கொலை முயற்சி!

Saravana Kumar