சாயச்சலவை தொழிற்சாலைகள் அகற்றம்; மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி

நாமக்கல் அருகே அனுமதியின்றி இயங்கிய 6 சாயச்சலவை தொழிற்சாலைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பிரதான தொழிலாக விசைத்தறி தொழிலிருந்து வருகிறது. இதில் பயன்படுத்தப்படும் நூல்களுக்குத் தேவையான நிறத்திற்காக 500க்கும்…

நாமக்கல் அருகே அனுமதியின்றி இயங்கிய 6 சாயச்சலவை தொழிற்சாலைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பிரதான தொழிலாக விசைத்தறி தொழிலிருந்து வருகிறது. இதில் பயன்படுத்தப்படும் நூல்களுக்குத் தேவையான நிறத்திற்காக 500க்கும் மேற்பட்ட சாயச்சலவை தொழிற்சாலைகள் இருந்தன. இந்த தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை அனுமதி பெறாமல் இயங்கி வந்ததுடன் சாயக்கழிவு நீரைச் சுத்திகரிக்காமல் நேரடியாகக் கால்வாய்கள் மூலம் காவிரி ஆற்றில் கலந்ததால் குடிநீர் மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 10 ஆண்டுகளாகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சுமார் 60 சாயத் தொழிற்சாலைகள் சுத்திகரிப்பு நிலையங்கள் மத்திய மாநில அரசு அனுமதியுடன் இயங்கி வருகின்றன. மேலும் அனுமதியின்றி இயங்கி வந்த சாயப்பட்டறைகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டுக் குழுவில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் செல்வகுமார் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குமாரபாளையம் அருகேயுள்ள தண்ணீர் பந்தல்காடு, தம்மன்ன செட்டியார் வீதி, காளியண்ணன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் இயங்கி வந்த ஆறு சாயத் தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தினால் இடிக்கப்பட்டது. மேலும் ஒரே நாளில் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் 6 சாயத் தொழிற்சாலைகள் இடிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.