27.8 C
Chennai
April 27, 2024
செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின்  98-வது பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 98 ஆவது தொடக்க நாளும், மூத்த தலைவர் நல்லகண்ணு-வின் 98 வது பிறந்த நாளும்  சென்னை தியாகராயர் நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அதேபோல் மறைந்த மூத்த தலைவர் கே. டி .கே தங்கமணியின் நினைவு நாளும் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் முதல் நிகழ்வாக மூத்த தலைவர் நல்லக்கண்ணு கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர்  கே. டி .கே தங்கமணியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூற முதலமைச்சரும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் நேரில் வந்திருந்தனர். அவர்களோடு  தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் கோபண்ணா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல்லகண்ணுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிகழ்ச்சியில் பேசிய  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ,
”1925ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட இதே நாளில் நம் எதிரியான
ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் தொடங்கப்பட்டது. மார்க்சியம் நமது தத்துவம். மனு
தர்மம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் தத்துவம்” எனப் பேசினார். தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 29- ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் திட்டமிட்டபடி படி நடைபெறும் எனக் கூறினார்.

முதலமைச்சர் வாழ்த்து  

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நல்லகண்ணு- வை நேரில் வந்து  சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ,பொதுவுடைமை இயக்கத்தின் சிற்பி நல்ல கண்ணுவின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தகைசால் தமிழர் விருது சங்கராய்யா, நல்ல கண்ணு போன்றோர்களுக்கு வழங்கப்பட்டதன் மூலம் அந்த விருது பெருமை பெற்றுள்ளது.

தனது கொள்கை பயணத்தில் நழுவி விடமால் தொடர்ந்து பயணிக்கும் நல்லகண்ணு, கொள்கைக்கும், இலட்சியத்திற்கும் இலக்கணமாக தள்ளாத வயதிலும் செயல்படுபவர்.அவரது அரும்பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் என கேட்டுகொள்கிறேன். பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட நாம் எடுத்துள்ள முயற்ச்சிக்கு நல்லகண்ணு வழிகாட்டியாக திகழ்கிறார் எனப் பேசினார். மேலும் திமுக அரசுக்கு பக்க பலமாக இருந்து வழிகாட்டும் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என அன்பான வேண்டுகோள் வைப்பதாக கூறினார். மத்திய அரசு மதச்சார்பையும் மதத்தையும் வைத்துக்கொண்டு இந்த நாட்டை சீரழித்து வருகிறது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமைக்க போராட வேண்டும் என  முதலமைச்சர் நிகழ்வில் பேசினார். முதலமைச்சரோடு அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு உடன் இருந்தனர்.

மூத்த தலைவர் நல்லகண்ணு பேச்சு 

முதலமைச்சரைத் தொடர்ந்து பேசிய மூத்த தலைவர் நல்லக்கண்ணு என்னை நேரில் சந்தித்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்த முதலமைச்சருக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கும் நன்றி தெரிவித்தார். சுதந்திரத்தை பாதுகாக்க சமத்துவம் சகோதரத்துவம் இருக்க வேண்டும். இவைகள் இல்லை என்றால் சுதந்திரத்தை பாதுகாக்க இயலாது என்று அம்பேத்கர் கூறியுள்ளார் அதன் அடிப்படையில் சமத்துவ மற்றும் சகோதரத்துவத்தை பேணிக்காத்து சுதந்திரத்தை பாதுகாப்பது நமது கடமை. மத்திய அரசு மதச்சார்பையும் மதத்தையும் வைத்துக்கொண்டு இந்த நாட்டை சீரழித்து வருகிறது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு மத்தியில் மதசார்பறற ஆட்சி அமைக்க போராட வேண்டும் என்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சு 

முதலமைச்சரைத் தொடர்ந்து பேசிய வைகோ “இந்த நாள் வரலாற்றில் மிக முக்கியமான நாள், மஞ்சல் நதியை 6 ஆயிரம் மயில்கள் நீந்திக் கடந்த மாவீரன் மா.வோ பிறந்த நாள். இதே நாளில் தான் 97 ஆண்டுகளுக்கு முன்னர் தாமிர பரணி ஆற்றங்கரை ஓரத்தில் நல்லக்கண்ணு பிறந்தார். இதே நாளில் தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. இப்படி ஒரே நாளில் இத்தனை முக்கிய நிகழ்வுகள் நடந்திருப்பது நமக்கு உத்வேகத்தை தருகிறது.  இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நல்லக்கண்ணு 13 ஆண்டுகள் தமிழ்நாட்டின் செயலாளராக இருந்துள்ளார். அகில இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அவர் இன்றும் உறுப்பினராக இருக்கிறார். பள்ளிப் பருவத்திலேயே பொதுவுடமை கருத்துகளால் ஈர்க்கப்பட்ட நல்லக்கண்ணு பள்ளி படிப்பிற்கு பிறகு எம்.டி.டி இந்துக் கல்லூரியில் படிக்கும் போது வெளியேற்றப் பட வேண்டிய நிலமை ஏற்பட்டது.

இதன் பின்னர் நல்லக்கண்ணு பட்ட சித்ரவதைகள் கொஞ்ச நஞ்சமல்ல ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை வீதி வழியாக அழைத்து வந்ததற்காக கட்டி வைத்து அடித்தார்கள். வெள்ளையர் ஆதிக்கத்தை எதிக்கின்ற தீரமிக்க புரட்சியாளர், போராளி என்பதனால் அவரை நெல்லை சதி வழக்கில் சேர்த்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அது மட்டுமன்றி அவரைத் தேடிக் கண்டுபிடித்து நெற்றி, கன்னம், மீசை உள்ளிட்ட இடங்களில் தீ வைத்து சுட்டார்கள். மலை உச்சிக்கு அழைத்துச் சென்று உருட்டி விட்டு கொலை செய்வோம் என மிரட்டீனார்கள். ஆனால் இப்படி எந்த அடக்குமுறைக்கும் அவர் அஞ்சவில்லை .

அப்படிப்பட்ட தியாக உணர்வு படைத்த காரணத்தில் தான் தகைசால் தமிழர் விருதுக்கு வழங்கப்பட்ட 15 லட்சத்தோடு தனது பங்காக 5 ஆயிரத்தை சேர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்தார். அதே போல் தமிழ்ச் சான்றோர் பேரவையினோர் அவருக்கு கொடுத்த காரை கட்சிக்கே கொடுத்து விட்டார். இத்தகைய தியாகம் உள்ளம் படைத்தவர்களை வரலாற்றிலே காண்பது அறிது. அவர் இன்னும் உடல் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும் பல்லாண்டுகள் வாழ வேண்டும். கம்யூனிஸ்ட் இயக்கத்தை வழிநடத்துவதோடு, சூழ்ந்துக் கொண்டிருக்கின்ற பயங்கரவாத சனாதன சக்திகளின் ஆக்கிரமைப்பை முறியடிப்பதற்கு நல்லக்கண்ணு அவர்களின் வழிகாட்டுதல் தேவை எனப் பேசினார்.

அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்த்து 

கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர்  பக்கத்தில் ”இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினரும், தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவருமான முதுபெரும் தோழர் ஆர்.நல்லகண்ணு,‌ 98 வயதை‌ நிறைவு செய்வது பெருமகிழ்ச்சி தருகிறது. ‌இன்னும் பல்லாண்டுகாலம் நம்மோடு வாழ்ந்து புரட்சிகர லட்சியங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என மூத்த தலைவர் நல்லக்கண்ணுவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன்  முதுபெருந்தலைவர் தகைசால் தமிழர் அய்யா நல்லகண்ணு அவர்கள் நோய் நொடியின்றி நூறாண்டுகளுக்கும் மேலாகப் பெருவாழ்வு வாழ விசிக சார்பில் நெஞ்சார வாழ்த்துகிறோம். அவரின் இருப்பு எளியோரின் பாதுகாப்பு என தனது ட்விட்டர் பக்கத்தில் நல்லக்கண்ணுவிற்கு வாழ்த்து கூறினார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ”தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், இந்திய பொதுவுடைமை கட்சியின் மூத்த தலைவருமான பெரியவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் சிறந்த உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் இன்னும் பல ஆண்டுகள் அவர் மக்கள் பணியாற்றிட இறைவனிடம் வேண்டுகிறேன்” என ட்விட்டரில் வாழ்த்து தெரிசித்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழகத்தின் மூத்த மக்கள் சேவகர், ஏழை பங்காளர், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா திரு நல்லகண்ணு அவர்களின் பிறந்த தினமான இன்று அவரை வாழ்த்தி வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதை பெற்ற மூத்த தலைவர் நல்லகண்ணு. அந்த விருதுக்கு வழங்கிய 15 லட்சத்தைப் பெற்று அதோடு 5 ஆயிரத்தை சேர்த்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அதே மேடையிலேயே குறிப்பிடத்தக்கது.

– பரசுராமன்.ப 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading