நியூஸ் 7 தமிழ் மற்றும் வெராண்டா IAS அகாடமி சார்பில் கருத்தரங்கு

தன்னம்பிக்கையுடனும், தெளிவான பயிற்சியுடன் சிவில் சர்வீஸ் தேர்வுகளை தேர்வர்கள் எதிர்கொண்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நியூஸ் 7 தமிழ் மற்றும் வெராண்டா IAS…

தன்னம்பிக்கையுடனும், தெளிவான பயிற்சியுடன் சிவில் சர்வீஸ் தேர்வுகளை தேர்வர்கள் எதிர்கொண்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நியூஸ் 7 தமிழ் மற்றும் வெராண்டா IAS அகாடமி சார்பில், உயரம் தொடு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஐஏஎஸ் பயிற்சி மற்றும் நுழைவு தேர்வு பயிற்சி ஆகியவற்றிக்கு சரியான முறையில் தயாராவது எப்படி என்பதில் தொடங்கித் தேர்வு நுணுக்கங்கள், செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு துறை சார்ந்த நிபுணர்கள் பதிலத்தனர்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவர் கார்த்திகேயன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகும் விதம், மாணவர்கள் செய்ய வேண்டியது, தவிர்க்க வேண்டியது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேசினார். அப்போது பேசிய அவர் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, குறிக்கோள் பயிற்சி இவற்றுடன் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எதிர்கொண்டால் வெற்றி பெறலாம் என்று தெரிவித்தார்.

மேலும் மாணவர்கள் எழுதிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்கள் தகுந்த திட்டமிடலுடன் தங்களது பயிற்சியை மேற்கொண்டால் வெற்றி இலக்கை எளிதாக அடைய முடியும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து ஆன்லைன் ஸ்காலர்ஷிப் தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கபட்டது. மேலும் நிகழ்ச்சியில் ரஞ்சித் திட்ட விளக்க உரை ஆற்றினார். நியூஸ் 7 தமிழின் தலைமை செய்தியாளர் சுடலைக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

Also Read: வேலூரில் நியூஸ் 7 தமிழ் இணைந்து நடத்திய ஐஏஎஸ் பயிற்சி கருத்தரங்கு

இதேபோல் நேற்று நியூஸ் 7 தமிழ் மற்றும் வெராண்டா IAS அகாடமி சார்பில், வேலூர் காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு மற்றும் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில், மாணவ மாணவிகளுக்கு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.