கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில், வெங்கட் சோமசுந்தரம், ரேஷ்மா கட்டாலா, செந்தில் வீராசாமி, பி.மதன் தயாரிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா , ராதிகா சரத்குமார், ப்ரிய தர்ஷினி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் மூலம் விக்ரம் உடன் முதல் முதலாக கூட்டணி அமைத்தார் கெளதம்.
2017 ம் ஆண்டு தொடங்கிய இந்த திரைப்படம் 2018 ம் ஆண்டு மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பல காரணங்களால் ஐந்து ஆண்டுகளாக திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. கடந்த மாதம் அப்படத்தின் இயக்குநர் கவுதம் மேனன் விக்ரம் உடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு ”நட்சத்திரங்கள் சீரமைக்கப்படும்”என்று பதிவிட்டிருந்தார்.
அண்மை செய்திகள்: இந்தியன் 2 படத்தில் மொத்தம் இத்தனை வில்லன்களா? – லேட்டஸ்ட் அப்டேட்
இந்நிலையில் ஒரு பேட்டியில் துருவ நட்சத்திரம் படம் 2022 டிசம்பரில் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பை இயக்குநர் கவுதம் வெளியிட்டுள்ளார். ஆனால சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. அதன் பின் இயக்குநர் கவுதம் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி நல்ல் வரவேற்பை பெற்றது.
தற்போது கவுதம் மேனன் லியோ படத்தில் ஒரு நடித்து வரும் நிலையில், துருவ நட்சத்திரம் குறித்த ஒரு அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், டால்பி 9.1.4 தொழில்நுட்பத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பின்னணி இசை உருவாகி வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.








