குறை சொல்ல முடியாத அளவிற்கு எனது அரசியல் வாழ்க்கை அமைந்துள்ளது – செல்லூர் ராஜூ

எதிர்க்கட்சிகள் கூட குறை சொல்ல முடியாத அளவிற்கு தனது அரசியல் வாழ்க்கை அமைந்துள்ளதாக மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ கூறியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்குத்…

எதிர்க்கட்சிகள் கூட குறை சொல்ல முடியாத அளவிற்கு தனது அரசியல் வாழ்க்கை அமைந்துள்ளதாக மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியில் மூன்றாவது முறையாக அதிமுக வேட்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ களம் இறங்கியுள்ளார்.

மதுரை கோச்சடை பகுதியில் உள்ள முத்தையா கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு கோச்சடை மற்றும் அதனை சுற்றி இருக்கக் கூடிய பகுதிகளில் அமைச்சர் செல்லூர் ராஜூ தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக ஆட்சி காலத்தில்தான் ஏழை மக்களின் நலனுக்காக 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டதாகக் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பேணி பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தனக்கென எந்தவிதமான ஆசாபாசமும் இல்லாமல், உங்கள் வீட்டு பிள்ளையாக மக்களுக்காக தாம் வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.