மக்கள், ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி விட்டதால், தமிழகத்தில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வரும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தேர்தலுக்காக அவசர அவசரமாக திட்டங்களை அறிவித்தது தப்பு என்றும், அப்படி அவரசமாக அறிவித்த திட்டங்களுக்கு அனுமதி அளித்த தேர்தல் ஆணையமே தப்பு எனவும் சாடினார். மேலும், சட்டமன்ற தேர்தலுக்காக கடந்த மூன்று மாதங்களாக அதிமுக பல திட்டங்களை அலங்கோலமாக அள்ளித்தெளித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.







