திமுக எதிர்க்கும் அளவிற்கு நாங்கள் வளர்ந்து விட்டோம்; சீமான்

திமுக எதிர்க்கும் அளவிற்கு தாங்கள் வளர்ந்துவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், 7 தமிழர் விடுதலையைத் தாமதப்படுத்தும்…

திமுக எதிர்க்கும் அளவிற்கு தாங்கள் வளர்ந்துவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், 7 தமிழர் விடுதலையைத் தாமதப்படுத்தும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சியினர், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது நாம் தமிழர் கட்சியினர் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திக் கலைந்து செல்லுமாறு கூறிய நிலையில் திமுகவினர் ஏற்க மறுத்ததால் அவர்களைக் காவல் துறையினர் கைது செய்ய முயன்றனர். அப்போது திமுகவினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து திமுகவைச் சேர்ந்த 16 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சீமான், திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துப் போராடுவது தங்களுக்குப் பெருமைதான் எனக் கூறினார். அரசுக்கு எதிராகப் பேசக்கூடாது என்பது நல்ல ஜனநாயகம் அல்ல என்றும், பாஜக செய்வதையே திமுகவும் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.