ஒமிக்ரான் பாதிப்பு 415 ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 415ஆக அதிகரித்துள்ளது. நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை ராஜேஷ் பூஷன், இதுவரை நாடு முழுவதும் 17 மாநிலங்களில் 358 பேர் ஒமிக்ரான் தொற்றால்…

நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 415ஆக அதிகரித்துள்ளது.

நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை ராஜேஷ் பூஷன், இதுவரை நாடு முழுவதும் 17 மாநிலங்களில் 358 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி தொற்று பாதிப்பானது 415ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போதுவரை 115 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் ஒமிக்ரான் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 108 பேர் மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து டெல்லியில் 79 பேரும், குஜராத்தில் 43 பேரும் தெலங்கானாவில் 38 பேரும், தமிழ்நாட்டில் 34 பேரும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை ஒரு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கூட பதிவாகவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

முன்னாதக கடந்த வெள்ளிக்கிழமை, 358 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 183 பேரின் மாதிரிகள் பகுபாய்வு செய்யப்பட்டதில் 87 பேர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என்றும் 3 பேர் பூஸ்டர் டோஸ்களை செலுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், தொற்று பாதிப்பை குறைக்க மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 5 அல்லது 5க்கும் மேற்பட்டவர்கள் கூட்டமாக கூடுவதற்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஹரியான மற்றும் டெல்லியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.