புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஒரு வளர்ச்சியும் ஏற்படவில்லை என என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
புதுச்சேரி, கதிர்காமம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரமேஷை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி பரப்புரையில் ஈடுபட்டார்.
கதிர்காமம் கதிர்வேல் சுவாமிகள் கோவிலில் சிறப்பு பூஜை செய்த பின்னர் மக்கள் மத்தியில் பேசிய ரங்கசாமி, புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானதாக கூறினார்.
புதுச்சேரியின் வளர்ச்சியில் 10 ஆண்டுகள் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். மாநிலத்தில் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாத காரணத்தால் தோல்வி அடைந்து விடுவோம் என்பதால்தான் நாராயணசாமி தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் ரங்கசாமி குற்றம் சாட்டினார்.







