முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

“கொசுவையே ஒழிக்க முடியாதவர்கள் ஊழலை எப்படி ஒழிப்பார்கள்”

கொசுவையே ஒழிக்க முடியாதவர்கள் ஊழலையும் லஞ்சத்தையும் எப்படி ஒழிப்பார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தாம்பரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அரசியலில் தலைமை மாறுவது முக்கியம் அல்ல, தத்துவம் மாற வேண்டும் எனக் கூறினார்.

கொசுவையே ஒழிக்க முடியாதவர்கள் ஊழலையும் லஞ்சத்தையும் எப்படி ஒழிப்பார்கள் எனக் கேள்வி எழுப்பிய சீமான், ஊழலுக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும் எனப் பேசினார். கூட்டணியில்லாமல் மக்களை மட்டுமே நம்பி களமிறங்கிய ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி எனவும் சீமான் தனது பரப்புரையில் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

பிரம்மாண்டமான 125 தங்கும் விடுதிகள்? – அமைச்சர் சேகர்பாபு

Saravana Kumar

“மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டுள்ளோம்” – புதுச்சேரி முதலமைச்சர்

Arivazhagan CM

தண்ணீர் என நினைத்து அமிலத்தை குடித்த மூதாட்டி உயிரிழப்பு!

Gayathri Venkatesan