திருச்செங்கோடு தொகுதி, அதிமுக வேட்பாளர் பொன் சரஸ்வதி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எலச்சிபாளையம் ஒன்றியத்தை சேர்ந்த மோளியப்பள்ளி, மாச்சாம்பாளையம், குமரமங்கலம், 87 கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பொன். சரஸ்வதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிராமம் கிராமமாக சென்று அதிமுக வேட்பாளர் பொன் சரஸ்வதி வாக்கு சேகரித்து வருகிறார் மோளியப்பள்ளி கிராமத்திற்கு சென்றவுடன் அப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகள் என திரண்டு வந்து ஆரத்தி எடுத்து பொன்.சரஸ்வதியை வரவேற்றனர்.
அப்பகுதியில் இதுவரை செய்த நலத்திட்ட உதவிகளையும் இனி செய்ய உள்ள திட்டங்களையும் குறித்து எடுத்துக்கூறியுள்ளார். மேலும் அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இலவச சிலிண்டர், கல்வி கடன் ரத்து உள்ளிட்டவைகளை எடுத்துக்கூறியும் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென வாக்கு சேகரித்தார்.







