இடைநிலை ஆசிரியர்கள் 7 வது நாளாக போராட்டம்…!

சென்னை எழும்பூரில் உள்ள கல்வி அலுவலகம் அருகே 7வது நாளாக இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் போாராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே, வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்றும் 7வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வந்துள்ள ஆசிரியர்கள் கோஷமிட்டபடி போராட்டத் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.