தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கான பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . அதில் 3,359 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம். இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு 2023-க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பங்களை (Ontine Agplication) வரவேற்கிறது. ஊதிய விகிதம் ரூ.18,200 முதல் 67,100 வரை ஆகும்.
இதுதொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் உறுப்பினர், செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ” தமிழக காவல்துறையில் 3,359 இரண்டாம் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படுகிறது. இந்த தேர்வுகளை எழுத விரும்பு இளைஞர்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதியான இன்று முதல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் http://www.tnusrb.tn.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு வழிகாட்டுதல்படி காவலர் தேர்வில் பொது தேர்வுடன், தமிழ் மொழி தகுதி தேர்வும் நடத்தப்படுகிறது.
இந்த தேர்வுக்கு மேற்கூறிய இணையத்தளத்தில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இணைய வழி விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான ஆரம்ப தேதி வரும் 18 ஆம் தேதியாகும். இணைய வழி விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி தேதி 17.09.2023 ஆகும். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்
ஓதுக்கீடுகள்:
மொத்த காலிப்பணியிடங்களிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு 10 சதவிகிதமும், சார்ந்துள்ள வாரிகதாரர்களுக்கு 10%. முன்னாள் இராணுவத்தினருக்கு 5% மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 3% ஒதுக்கப்படும். தற்போதுள்ள அரசு விதிகளின் படி வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கப்படும். கல்வித் தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு (01.07.2023-ன் படி) :குறைந்தபட்சம் 18 வருடங்கள் அதிகபட்சம் 25 வருடங்கள் இருக்க வேண்டும். வயது உச்சவரம்பு பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா







