கோவிஷில்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எட்டு வாரங்கள் கழித்து எடுத்துக்கொண்டால்தான் முழுமையான ஆற்றலுடன் செயல்படும் என உலக சுகாதார அமைப்பின் நோய்த்தடுப்பு ஆலோசனை குழு மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.
இந்த கோரிக்கையை ஏற்ற மத்தியரசு மாநில அரசுகளை இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு கடிதம் எழுதியுள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரசெனிக்கா இனைந்து தயாரித்த கோவிஷில்ட் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் இரண்டாவது டோஸை 6 வாரங்களில் இருந்து 8 வாரங்கள் கழித்துத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக முதல் டோஸ் தடுப்பூசிக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்குமான இடைவெளி 28 நாட்கள் இருந்து. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான இடைவெளி குறித்து ஆராய்ந்த மருத்துவ குழுவினர் இரண்டாவது டோஸின் இடைவெளியை 28 நாட்களில் இருந்து உயர்த்த அறிவுரைக் கூறியுள்ளனர்
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் நோய்த்தடுப்பு ஆலோசனை குழுவான ‘National advisory committees on immunization’ மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. இந்த விதிமுறை கொவிஷில்டிற்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.







