‘இந்த க்ரைம் தப்பில்லை’ திரைப்பட திரைவிமர்சனம்…!

’இந்த க்ரைம் தப்பில்லை’ திரைப்படம் என்ன சொல்கிறது பார்க்கலாம்…. மதுரியா புரொடக்ஷன்ஸ் மனோஜ் கிருஷ்ணசுவாமி தயாரிப்பில் “இந்த கிரைம் தப்பில்ல” நாளை (அக்டோபர் 6ம் தேதி) வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை…

’இந்த க்ரைம் தப்பில்லை’ திரைப்படம் என்ன சொல்கிறது பார்க்கலாம்….

மதுரியா புரொடக்ஷன்ஸ் மனோஜ் கிருஷ்ணசுவாமி தயாரிப்பில் “இந்த கிரைம் தப்பில்ல” நாளை (அக்டோபர் 6ம் தேதி) வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டார்.

தேவகுமார் இயக்கத்தில் ஆடுகளம் நரேன் நடித்து வெளிவந்த திரைப்படம் “இந்த கிரைம் தப்பில்லை”. இத் திரைப்படத்தில் பாண்டி கமல், மேக்னா ஏலன், வெங்கட் ராவ், கிரேசி கோபால் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் கதை

செல்போன் கடையில் வேலை பார்க்கிறார்  மேக்னா. அப்போது அங்கு வரும் 3 பேரை காதலிப்பது போல் நடித்து தன் பின்னால் சுற்ற வைக்கிறார். இன்னொரு பக்கம் பெண்களுக்கு நடக்கும் பாலியல் சம்பவங்களை தடுக்கும் விதமாக முன்னாள் ராணுவ வீரர் ஆடுகளம் நரேன் போராடுகிறார். இவர் போராடும் விதம் ரொம்ப silent ஆக இருக்கிறது. இந்த தடுப்பு நடவடிக்கைகளை எப்படி எல்லாம் செய்கிறார். இதன் மூலம் பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கிறாரா என்பது தான் மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்கள்

பெண்களை அவர்களது உரிமை இல்லாமல் பாலியல் துன்புறுத்தல் செய்து அவர்களை கொலை செய்யும் காமவெறி பிடித்த மிருகங்களுக்கு தண்டனை நாம் கொடுத்தாலும் தப்பில்லை என்ற கோணத்தில் கதை உருவாகி இருக்கிறது. இந்த அற்புதமான கதைக்கு முதலில் இயக்குநர் பாராட்டுகள். ஆனால் நல்ல கருத்துக்களை கொண்ட கதையை எப்படி காட்சிகளில் தெளிவு படுத்துவது என்பதில் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர்.

திடீர் திடீரென்று வரும் பின்னணி இசைக்கும் படத்திற்கும் சம்மந்தமே இல்லை. ஒளிப்பதிவு படுமோசம். படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பும் அப்பட்டமாக செயற்கை தனமாக இருக்கிறது. கதையில் ஒரு சுவாரசியம் இல்லை. எங்கெங்கோ போய் எங்கெங்கோ கொண்டு வந்த மாதிரி படம் நகர்கிறது. மொத்தத்தில் கருத்து நல்லா இருக்கு ஆனா மசாலா கொஞ்சம் கூட ஒட்டல.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.