உலக கோப்பை தொடர் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை எளிதாக வீழ்த்தியது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின், 13வது சீசன் இன்று இந்தியாவில் துவங்கியது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட 10 அணிகள், ‘ரவுண்டு ராபின்’ முறையில் மோதுகின்றன.
இன்று ஆமதாபாத்தில் துவங்கிய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லதாம் பீல்டிங் தேர்வு செய்தார். பேட்டிங் செய்ய களம் இறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 282 ரன் எடுத்தது.
283 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.
நியூசிலாந்து வீரர்கள் தேவோன் கான்வே, ரட்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்து சதமடித்தனர். ஆட்டமுடிவில் தேவோன் கான்வே ஆட்டமிழக்காமல் 152 ரன்களும், ரட்சின் ரவீந்திரா ஆட்டமிழக்காமல். 123 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.







