முக்கியச் செய்திகள் உலகம் ஆசிரியர் தேர்வு கட்டுரைகள் செய்திகள் Health

குழந்தையின்மைக்கு தீர்வு – விடியல் தரும் விஞ்ஞானிகளின் புதிய ஆராய்ச்சி!


ஜெயகார்த்தி

ஒரு குடும்பத்தில் பத்து குழந்தைகள் வளர்ந்த நம்முடைய வீட்டில் இப்போது குழந்தையின்மை மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதற்கு தீர்வைத் தரும் ஆராய்ச்சி ஒன்றில் சர்வதேச விஞ்ஞானிகள் வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர். அது பற்றியும் அவர்கள் உருவாக்கி இருக்கும் தனித்துவமான புரதம் குறித்தும் பார்ப்போம்… 

அச்சமூட்டும் குழந்தையின்மை பிரச்னை

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தற்போது எல்லாம் ஓரிரு குழந்தையைப் பெற்று வளர்ப்பதே பெரும் போராட்டமாக மாறிவிட்டது. அதுவும் குழந்தைப் பேறு என்பதே அச்சமும், பதற்றமும், சிக்கலும் நிறைந்ததாக ஆகிவிட்டது. ஆனால் நம்முடைய பாட்டியைக் கேட்டால், அவருடைய அப்பத்தாவுக்கு (அப்பாவின் அம்மா)ஒரு டஜன் குழந்தைகள் என்றும், அம்மம்மாவுக்கு (அம்மாவின் அம்மா) 10 குழந்தைகள் என்றும் அதுவும் அனைத்து குழந்தைகளும் சுகப் பிரசவம் என்றும் கதை கதையாகச் சொல்வார்கள். தற்போது திருமணமாகும் தம்பதியர் ஓரிரு குழந்தைகளையே பெற்றுக்கொள்ளும் போதிலும், அவர்களுக்கு குழந்தையின்மை என்ற வார்த்தையே பதற்றம் தருவதாக இருக்கிறது. அப்படி பிறக்கும் ஓரிரு குழந்தை கூட அறுவைச் சிகிச்சையில் தான் பிறப்பதும் அதிகரித்து வருகிறது.    

குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதம்

இந்தியாவில் 1975 – 80 கால கட்டத்தில், ஆயிரம் மக்கள் தொகைக்கு 36.7 குழந்தைகள் பிறந்தன. அதுவே 2015 – 20 கால கட்டத்தில் பாதியாகக் குறைந்துவிட்டதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதாவது

இந்த கால கட்டத்தில் குழந்தை பிறப்பு என்பது 18.9 ஆக சுருங்கி விட்டது. இதுவும் கூட 2045-50 ஆண்டு வாக்கில் 12.1 ஆக சரியும் என்றும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

குழந்தையின்மை தொடர்பான மற்றொரு ஆராய்ச்சியில், நகர்ப்புறங்களில் வாழும் ஆறில் ஒரு தம்பதி, குழந்தையின்மை பிரச்னையை எதிர்கொள்வதாக குறிப்பிடுகிறது. 10-15 விழுக்காடு தம்பதிகள் கருத்தரித்தல் மற்றும் குழந்தையின்மை  சிக்கலை எதிர்கொள்வதாக எய்ம்ஸ் (AIIMS) ஆய்வும் சொல்கிறது.

தனித்துவ புரதம் குறித்து புதிய ஆராய்ச்சி

இந்த நேரத்தில் தான், குழந்தையின்மைக்கு தீர்வைத் தரும் தனித்துவ புரதம் குறித்த புதிய ஆராய்ச்சி ஒன்றில் செக் குடியரசு நாட்டின் செக் அறிவியல் அகாடமியின் உயிரி தொழில்நுட்ப மையத்தின் தலைவரும் இனப்பெருக்கம் குறித்த ஆராய்ச்சியாளருமான கேதரினா கோம்ஸ்கோவா புதிய சாதனை படைத்துள்ளார்.

24 பேர் கொண்ட குழு, 18 ஆண்டுகள் தொடர்ந்து முயன்று தனித்துவமான புரதம் ஒன்றைக் கண்டறிந்துள்ளதாகவும் அதற்கு கிரேக்கத்தில் தாய்மைக்கான கடவுளாக போற்றப்படும் “மையா” (MAIA) என்று பெயரிட்டுள்ளதாகவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

உயிர் சேர்க்கைக்கு உதவும் புரதம்

பாலூட்டிகளில், ஆண் – பெண் அணுக்கள் ஒன்று சேர்தலே, தற்போதைய காலகட்டத்தில் இனப்பெருக்கத்தின் மிகப்பெரிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. அதனால்

விந்தணு மற்றும் கருமுட்டை ஒன்று சேர்வதற்கும், அதனை ஒன்று சேர்த்து உயிர் உருவாக்கலுக்கு உதவும் வகையில் தனித்துவ புரதத்தை ( FCRL3 – Fc receptor-like 3) கண்டறிந்துள்ளதாகவும், இது கருமுட்டையையும், விந்தணுவையும் இணைக்கும் தன்மை கொண்டது

என்றும் கேதரினா கோம்ஸ்கோவா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகால ஆராய்ச்சி

20 ஆண்டுகள் மேற்கொண்ட தீவிர ஆராய்ச்சியின் முடிவில் இந்த புரதத்தை கண்டறிந்துள்ளதாகவும், FCRL3 என்ற புரதம் மனிதர்களிடம் மட்டுமே இருக்கக் கூடியது என்றும் அதற்கான

அனுமதியை முறைப்படி பெற்று ஆராய்ச்சி மேற்கொண்டது மிகப்பெரிய சவாலாக இருந்தது என்றும் கேதரினா கூறியுள்ளார். அத்துடன் மனிதர்களின் கருமுட்டையையும், விந்தணுவையும் ஆராய்ச்சிக்கு பயன்படுத்த ஒப்புதல் கிடைப்பதற்கே இரண்டு ஆண்டுகள்

ஆகிவிட்டதாகவும் கேதரினா தெரிவித்துள்ளார்.

வாழ்வின் மிக முக்கியமான தருணம்

இந்த தனித்துவமான “மையா” என்று பெயரிடப்பட்ட புரதம் குறித்த ஆராய்ச்சி முடிவுகள், குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வையும், குழந்தைகள் அதிகம் பிறப்பதைத் தடுக்க உதவும் கான்ட்ராசெப்டிவ் உருவாக்கத்திற்கு பெரிதும் உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

குழந்தைப்பேறு என்பது தான் வாழ்வின் மிக முக்கியமான தருணம் என்றும் அதில் நேரிடும் சிக்கலுக்கு தீர்வு காண்பது என்பது மிக முக்கியமானது

என்றும் இந்த ஆராய்ச்சிக்கு தலைமை வகித்த கேதரினா கோம்ஸ்கோவா தெரிவித்துள்ளார். இந்த ஆய்வை குழுவினருடன் இணைந்து மேற்கொண்டு தொடர இருப்பதாகவும் கேதரினா கோம்ஸ்கோவா கூறியுள்ளார்.

செயற்கைக் கருவூட்டல் மையங்களின் எண்ணிக்கையும் பல்கிப் பெருகி பணம் கொழிக்கும் இடமாக மாறி வருகிறது.  அண்மையில் கருமுட்டை விற்பனை தமிழ்நாட்டில் பூதாகரமாகி அரசு கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையையும் நாம் பார்த்து வருகிறோம். கருத்தரித்தல் மற்றும் அதற்கான பரிசோதனைக்கு சென்றாலே இயற்கையா? செயற்கையா? என்ற கேள்வியை மருத்துவ உலகமே முன்வைக்கிறது. அந்த அளவுக்கு காலம் மாறிவிட்ட சூழலில், மக்களுக்கு பயன்தரும் ஆராய்ச்சிகள் இன்னும் தொடர வேண்டியது அவசியம்.

– ஜெயகார்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிவகளையில் அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் நடவடிக்கை: தங்கம் தென்னரசு

EZHILARASAN D

மகாராஷ்டிராவில் பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

EZHILARASAN D

காதலியை காண மணப்பெண்போல் வேடம் அணிந்த காதலுனுக்கு அடி உதை!

G SaravanaKumar