ஓமலூரில் குழந்தையின்மைக்காக பெற்ற தவறான சிகிச்சையால் பெண் காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கரட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாலதி. இவர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும், குழந்தை இல்லாததால், தனியார் மருத்துவமனையில் கடந்த 14ம் தேதி குழந்தையின்மை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் கட்டி இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து அவரை மற்றொரு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







