இந்தியா

புத்தாண்டு அன்று இந்தியாவில் 60,000 குழந்தைகள் பிறப்பு; யுனிசெப் அமைப்பு தகவல்!

புத்தாண்டு தினத்தில் உலகிலேயே அதிகபட்சமாக 60,000 குழந்தைகள் இந்தியாவில் பிறந்துள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெப் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் புத்தாண்டு தினத்தில் பிறக்கும் குழந்தைகள் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில், ஜனவரி 1ஆம் தேதி பிறந்த குழந்தைகள் பற்றி தகவலை வெளியிட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில் ஜனவரி 1ஆம் தேதி உலகம் முழுவதும் 3,71,504 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் இதில் இந்தியாவில் அதிகபட்சமாக 60,000 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை குழந்தை பிறப்பு விகிதத்தில் முதலிடத்தைப் பிடிக்கும் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா தொடர்ந்து இரண்டாவதாக முதலிடம் பெற்றுள்ளது. இருப்பினும் இந்தியாவில் புத்தாண்டு அன்று குழந்தை பிறப்பு விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டில் இந்தியாவில் 67,395 குழந்தைகள் பிறந்தன.

இதனிடையே இந்த ஆண்டு புத்தாண்டில் குழந்தை பிறப்பு விகிதத்தில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இந்த புத்தாண்டில் மட்டும் 35,615 குழந்தைகள் பிறந்துள்ளன. இதற்கு அடுத்தப்படியாக நைஜீரியா (21,439), பாகிஸ்தான் (14,161), இந்தோனேசியா (12,336), எத்தியோப்பியா (12,006), அமெரிக்கா (10,312), எகிப்து (9,455), பங்களாதேஷ் (9,236) மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு (8,640) குழந்தைகள் பிறந்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தீவிரமடைகிறதா கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை?

G SaravanaKumar

பெங்களூருவில் நுழைய கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்!

Halley Karthik

பார்த்தா சாட்டர்ஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Mohan Dass

Leave a Reply