தமிழ் நாடு முழுவதும் பள்ளிகள் இன்று திறப்பு…!

கோடை விடுமுறை முடிந்து தமிழ் நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.

தமிழ் நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெயிலின் காரணமாக பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து தமிழ் நாடு முதலமைச்சர் விஜயுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழ் நாட்டில் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகளும் ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.

பள்ளிகள் திறைப்பையொட்டி வளாகப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.