முதலமைச்சர் விஜயுடன் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் சந்திப்பு…!

தமிழ் நாடு முதலமைச்சர் விஜயை நடிகர் எம்.எஸ் பாஸ்கர் நேரில் சந்தித்துள்ளார்.

தமிழ் நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜயை நேரில் சந்தித்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறன்றனர். அந்த வகையில் நேற்று தமிழ் நாடு முதலமைச்சர் விஜயை நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது முதலமைச்சராக பதவியேற்ற விஜய்க்கு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வாழ்த்து தெரிவித்தார். அதே போல் இருவரும் சேர்ந்து நடித்து திரைப்படங்கள் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் விஜய் பார்க்கிங் படத்திற்காக தேசிய விருது பெற்ற எம்.எஸ்.பாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய் நடித்த சிவகாசி, திருப்பாச்சி, அழகிய தமிழ் மகன், காவலன், வேலாயுதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.