முதல் சிங்கிள் மாதம் – விஸ்வத்நாத் அண்ட் சன்ஸ் பட அப்டேட் கொடுத்த ஜிவி…!

விஸ்வாநாத் அண்ட் சன்ஸ் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து சூர்யா, தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வாநாத் அண்ட் சன்ஸ் படத்தில் நடித்துள்ளார்.

சித்தாரா எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் நாக வம்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ரவீனா டான்டன், பவானி ஸ்ரீ, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார்.

அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் விஸ்வாநாத் அண்ட் சன்ஸ் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “#VAS #VishwanathAndSons — முதல் சிங்கிள் மாதம்… நாங்கள் மீண்டும் முழு வீச்சில் திரும்பிவிட்டோம்! ❤️💥💥💥💥 #vishwanathandsons” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.