ஒமிக்ரான் வைரஸ்: கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு

ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் முழுமையாக மீள முடியாத நிலையில், அந்த வைரஸ் அடுத்தடுத்து…

ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் முழுமையாக மீள முடியாத நிலையில், அந்த வைரஸ் அடுத்தடுத்து உருமாறி வருகிறது. இப்போது தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக் கிறது. இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மையை கொண்டது என்பதால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்தியாவிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஒமிக்ரான் வைரஸ் டெல்டா வகை வைரஸை விட வேகமாக பரவும் ஆபத்து உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும், கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் உயிரிழப்புகளை தடுக்க முடிவதோடு, நோய் எதிர்ப்பாற்றலும் அதிகரிக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இணை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி தடுப்பூசி செலுத்திக்கொள்ள சுகாதார பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.