முக்கியச் செய்திகள் தமிழகம்

நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

மதுரையில் பள்ளிக்கு செல்வதாக கூறி நண்பர்களுடன் குளிக்க சென்ற பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உத்தங்குடி பகுதியில் உள்ள ஊரணி ஒன்றில் பள்ளி மாணவனுடையை சடலம் ஒன்று மிதந்துகொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனையடுத்து உடலை மீட்க வந்த காவல்துறையினர் கரையில் கிடந்த பையை சோதனையிட்டபோது உயிரிழந்த மாணவன் மதுரை கோரிப்பாளையம் ஜம்புராபுரம் மார்க்கெட் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் மைதின் என்பது தெரியவந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து பள்ளி மாணவன் விவரம் குறித்து மாணவன் பயிலும் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிக்கு தொடர்புகொண்டு கேட்டபோது இரு நாட்களாக பள்ளிக்கு வரவில்லை என தகவல் அளித்துனர். இதனையடுத்து மாணவனின் பெற்றோரை தொடர்புகொண்ட கேட்டபோது மாணவன் பள்ளிக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளா்.

இந்நிலையில் ஊரணியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இது குறித்து கே.புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பள்ளி மாணவன் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு தனது நண்பர்களுடன் குளிக்க சென்றது தெரியவந்துள்ளது. பள்ளிக்கு செல்வதாக கூறி நண்பர்களுடன் குளிக்க சென்ற பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அமைச்சரவையில் தெரிந்துகொள்ளவேண்டிய சுவரஸ்யமான விஷயங்கள்!

மதுரையில் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்

Arivazhagan Chinnasamy

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும்- தமிழ்நாடு முதலமைச்சருக்கு கேரள முதலமைச்சர் கடிதம்

Web Editor