முக்கியச் செய்திகள் தமிழகம்

பாசன கால்வாயில் திடீர் வெண்ணிற நுரை; விவசாயிகள் அச்சம்

மதுரை மாவட்டம் வெள்ளக்கல் பகுதியில் விவசாய பாசன கால்வாயில் ஏற்பட்டுள்ள திடீர் வெண்ணிற நுரையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் அயன்பாப்பாகுடி கண்மாய், நல்லதங்காள் ஊரணி, தவரானேந்தல் கண்மாய், உள்ளிட்ட எட்டு கண்மாய்கள் உள்ளன. இதன்மூலம் அவனியாபுரம் வெள்ளக்கல் பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது, கண்மாயில் இருந்து விவசாயத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரில் வெண்ணிற நுரை கிளம்பி வருவதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், வாய்க்கால் நீருடன் கலந்து வெண்ணிற நுரை கிளம்பி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

உலக அளவில் இப்படியொரு சாதனை படைத்த சூர்யாவின் ’சூரரைப் போற்று’!

Halley karthi

பிரபல இந்தி இயக்குநருடன் இணைகிறார் துல்கர் சல்மான்!

Halley karthi

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்!

Hamsa