பத்தாம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு

பத்தாம் வகுப்பு மாணவி புழல் ஏரி அருகே உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் காவங்கரை பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் குமார் என்பவரது மகள் ஹரிப்ரியா (15) பத்தாம் வகுப்பு…

பத்தாம் வகுப்பு மாணவி புழல் ஏரி அருகே உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் காவங்கரை பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் குமார் என்பவரது மகள் ஹரிப்ரியா (15) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி மாணவியான இவர் புழல் ஏரியில் உள்ள ஜோன்ஸ் டவர் அருகே உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த புழல் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி ஹரிப்பிரியா-வை காணவில்லை எனப் பெற்றோர் ஏற்கனவே புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் அவரை புழல் ஏரியில் சடலமாக மீட்டுள்ளனர். உயிர் இழந்த மாணவி செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததை பெற்றோர் கேட்டதால் புழல் ஏரியில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டாரா ? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.