பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
“இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகளைத் திறக்க தயாராக இருக்கிறோம். 14 மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார்கள். இன்னும் ஒரு சிலர் மட்டும் தான் தடுப்பூசி செலுத்தவில்லை அவர்களையும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தி உள்ளோம்.” என்று கூறியுள்ளார்.
மேலும், குழந்தை தொழிலாளர்கள் இந்த கொரோனா காலத்தில் வேலைக்கு சென்றிருந்தால் உடனடியாக அதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுழற்சி முறையில் பள்ளிகளைத் திறக்க திட்டமிட்டுள்ளோம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் இதுவரை 25,79,130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 34,367 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








