மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் பன்னீர் செல்வர். இவரது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது, திருமணம் செய்து கொள்வதாக கூறி அதே பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் வீட்டிலிருந்து அவரை கடத்தி சென்றுள்ளார்.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவியை கண்டுபிடித்ததுடன், பிரவீன் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.







