வரும் 14ஆம் தேதி முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து வரும்14 ஆம் தேதி முதல் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அலுவல பணியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளி கல்விதுறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
உயர் கல்வி செல்லக்கூடிய மாணவர்களின் சான்றிதழ் விநியோகம், மதிப்பெண் வழங்குவது, மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







