முக்கியச் செய்திகள் தமிழகம் வேலைவாய்ப்பு

பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்!

பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு வரும் 21ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்புக்கான நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகின. அதில், சில முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததால், மறுதேர்வு நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில், மறுதேர்வுக்கான கால அட்டவணையை அண்ணா பல்கலை கழகம் வெளியிட்டுள்ளது. அதில், வரும் 21ம் தேதி முதல் தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியர் மாணவர்களுக்கு அடுத்த மாதம் 17ஆம் தேதி முதல், தேர்வுகள் தொடங்கவிருப்பதாக தெரிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், விரிவான அட்டவணையை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Advertisement:

Related posts

தமிழகத்தில் 234 தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க ஸடாலின் தயாரா? அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி

Jeba

”குடிமராமத்து பணி: இணையத்தில் வெளியிடுக”- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

Jayapriya

தமிழகத்தில் அமலுக்கு வந்தது புதிய கட்டுபாடுகள்!

Ezhilarasan