முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம்: முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை மூலம் பயிற்சி வகுப்புகள் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை விரைவில் முடிக்க 4 கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். இதன்படி, சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலியில் இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வளமான எதிர்காலம் வழங்க ‘சமத்துவம் காண்போம்’ என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்படும் எனவும், சாதி வேறுபாடற்ற மயானங்கள் இருக்கும் சிற்றூர்களுக்கு பத்துலட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்கான பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்க சட்டம் இயற்றப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Advertisement:
SHARE

Related posts

தேர்தல் ஆணையத்தின் தடையை எதிர்த்து மமதா பானர்ஜி தர்ணா!

Halley karthi

மதத்தை வைத்து பிரிவினை செய்ய முயல்பவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: கமல்ஹாசன்

Saravana

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் நல்லகண்ணு!

Halley karthi