தமிழ்நாட்டில் அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டு மென தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செம்மஞ்சேரி தாமரைக்கேணியில் நீர்நிலையை ஆக்கிரமித்து, காவல்நிலையம் கட்டப் பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாட்டில் ஏராளமான நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரி கள் தவறி விட்டதாகவும், கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் நீதிபதி கள் தெரிவித்தனர்.
அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீர் நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால்தான் வருங்கால சந்ததி களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.







