செய்திகள்

தேர்தல் பணியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று: சத்தியபிரதா சாகு விளக்கம்

வாக்கு எண்ணும் பணியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகம், அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா மாநிலங்களில் 2021 சட்டமன்றதேர்தல் கடந்த மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29 வரை பல கட்டங்களாக நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம்தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நாளை காலை 6 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியான பிறகே அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று முன்பே தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்திருந்தார்.மேலும் கொரோனா பரிசோதனை அல்லது கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸாவது செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், தேர்தல் பணியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 தேர்தல் பார்வையாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். அவர்களுக்குப் பதிலாக புதிய நபர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் முடிவுகள் www. elections.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்!

Gayathri Venkatesan

பழங்குடியினருக்கு வீடு கட்டித் தரப்படும் – வேல்முருகன்

Gayathri Venkatesan

வங்க தேசத்தின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்!

Jeba