அதிமுகவை பிரித்தாள நினைக்கும் சசிகலாவின் முயற்சி எடுபடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா ஆடியோ அரசியல் செய்வதாக தெரிவித்தார்.
சசிகலாவின் பிரித்தாளும் முயற்சி எடுபடாது எனக் கூறிய அவர், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட தால்தான் புகழேந்தி நீக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.
கூட்டணியில் இருந்துகொண்டே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார். டெல்லி செல்லும் முதலமைச்சர், தமிழ்நாட்டின் நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி அதை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.







