தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவகாற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய…

தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவகாற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.

மேலும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு நாட்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.