அதிமுகவில் சசிகலா, டி.டி.வி. தினகரன்?: ஓ.பி.எஸ்., தலைமையில் கூட்டம்

அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை இணைப்பது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில்…

அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை இணைப்பது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சையது கான் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது, சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை எந்தவித நிபந்தனையும் இன்றி கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாகவும், இதனை வரும் 5 -ந் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.