முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக தொண்டர்களை குழப்ப சசிகலா முயல்கிறார்: கே.பி.முனுசாமி

அதிமுக தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சிக்கிறார் என கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

 சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு சசிகலா அமைதியாக இருந்து வந்தார்.தான் அரசியலுக்கு ஒதுங்கி இருக்கப்போவதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுக நிர்வாகி ஒருவருடன் சசிகலா போனில் பேசும் ஆடியோ ஒன்றும் வெளியானது. அதில், ஒன்றும் கவலைப்படாதீங்க, கட்சியைக் கண்டிப்பா சரி பண்ணிடலாம், கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது, கொரோனா குறைந்த பிறகு எல்லோரையும் சந்திக்கிறேன் என்று கூறினார். இது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, “சசிகலாவின் பேச்சுக்கு ஒரு அதிமுக தொண்டர் கூட செவி சாய்க்க மாட்டார், அதிமுகவை திசை திருப்பி தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி செய்கிறார். அவரது எண்ணம் ஈடேறாது, ஒரு தொண்டரும் சசிகலாவிடம் பேசவில்லை. மாறாக சசிகலா தான் அவர்களிடம் பேசி வருகிறார்” என்று குற்றம்சாட்டினார். 

மேலும், சசிகலா பேசும் நபர்கள் அமமுகவை சேர்ந்தவர்கள் என்ற கே.பி.முனுசாமி, ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையவாவது சசிகலா குடும்பம் அதிமுகவில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Advertisement:

Related posts

PPE கிட் அணிந்து திருமணம் செய்து கொண்ட ஜோடி!

Ezhilarasan

மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை; ஜெ.பி.நட்டா நம்பிக்கை

Saravana Kumar

சர்வதேச பயணிகள் விமானங்கள் ரத்து நீட்டிப்பு!

Saravana Kumar