லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரஃபுல் கோடா படேல் நீக்கக் கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியாக அண்மையில் நியமிக்கப்பட்ட பிரஃபுல் கோடா படேல் இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து கடந்த சிலதினங்களுக்கு முன்பு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி வலியுறுத்தி இருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை நீக்கக்கோரி முதல்வர் பினராயி விஜயன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. லட்சத்தீவில் நிர்வாக அதிகாரி மூலம் பா.ஜ.க தனது கொள்கைகளை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் எனவும், லட்சத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுலாவை மேம்படுத்துதல் என்ற பெயரில் லட்சத்தீவில் உள்ள மக்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது. காலனி ஆதிக்க இந்தியாவில் இருந்த நிலைமையைவிட லட்சத்தீவில் தற்போதுள்ள நிலை மிகவும் மோசமாக உள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்று இரண்டாவது முறையாக முதல்வர் பினராயி விஜயன் ஆட்சிக்கு வந்த பின்னர், சட்டப்பேரவையில் இத்தீர்மானம் முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.