இத்தனை ஆண்டுகள் இருந்த அனுபவத்தை பரிசோதிக்கும் விதமாக சர்தார் படம் அமைந்துள்ளது என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு
விழா சென்னை வடபழனியில் உள்ள விஜயா மாலில் நடைபெற்றது. இதில் நடிகர்
கார்த்தி, ராஷிகண்ணா, இயக்குனர் பி.எஸ்.மித்ரன், லைலா உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்ச்சியில் பேசிய ராஷி கண்ணா, “ உங்களுக்கு படத்தின் டிரெய்லர் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். மித்ரன் மிகவும் திறமை வாய்ந்த இயக்குனர். இது போன்ற இயக்குனர்கள் இருந்தால் சினிமா மேலும் பெரிய இடத்திற்கு செல்லும். அவர் உருவாக்கியுள்ள கதாப்பாத்திரங்கள் மற்றும் அவர் கதையை கொண்டு செல்லும் விதம் சிறப்பாக இருந்தது. கார்த்தி மிகவும் திறமை வாய்ந்த நடிகர். அவருடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி. லைலா உடன் குறைவான காட்சிகள் தான் உள்ளது. அவருடன் நடித்ததில் கூடுதல் மகிழ்ச்சி” என்றார்.
பின்னர் பேசிய நடிகர் கார்த்தி, “முதல் முறையாக நான் வயதானவன் கதாப்பாத்திரமாக நடித்துள்ளேன். இவ்வளவு ஆண்டுகள் இருந்த அனுபவத்தை பரிசோதிக்கும் விதமாக இந்த படம் அமைந்துள்ளது. ஒரு பெரிய விஷயத்தை எளிமையாக புரிய வைக்க முயற்சி செய்துள்ளோம். இது ஒரு இந்தியன் spy படம். ஜேம்ஸ் பாண்ட் படம் போன்று இல்லை.
இயக்குநர் மித்ரன் என்னை மட்டும் அல்ல எல்லாரையும் டார்ச்சர் செய்துள்ளார். வில்லனுக்கு நிறைய மெனக்கெட்டு உள்ளார் இயக்குனர். ஹீரோவை விட வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி வெளியீடு எல்லாருக்கும் ரொம்ப சிறப்பு. அது மாதிரி சர்தார் படமும் இருக்கும் என நினைக்கிறேன். ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கும், உதய்க்கும் நன்றி. சிவாவின் பிரின்ஸ் படமும் தீபாவளிக்கு வெளியாகிறது. இரண்டும் வெவ்வேறு படங்கள். அதனால் இரு படங்களுக்கும் உங்களின் ஆதரவு வேண்டும்” என்று தெரிவித்தார்.
கார்த்தி குரலில் வெளியான ‘ஏறுமயிலேறி’ பாடல்; வைரலாகும் ‘சர்தார்’ லிரிக்கல் வீடியோ