நாட்டுப்புற பாணியில் கார்த்தியின் குரலில் உருவாகியுள்ள ‘ஏறுமயிலேறி’ எனும் இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் P.S.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சர்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தீபாவளி அன்று வெளியிடப்போவதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஷி கண்ணா, ஷங்கி பாண்டே, லைலா, முனீஷ்காந்த், முரளி சர்மா, இளவரசு ஆகிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
பிரின்ஸ் பிக்சர் பேனரில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இப்படத்தின் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘ஏறுமயிலேறி’ எனும் இப்பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார்.
இந்தப் பாடலை யுகபாரதி எழுதி உள்ளார். சுமார் 4.17 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த பாடல் நாடக மேடையில் பாடும் பாடலாகப் படத்தில் இடம்பெற்றிருக்கும் எனத் தெரிகிறது. இப்பாடலுக்கு நடன இயக்குநர் ஷோபி இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். நாட்டுப்புற பாணியில் கார்த்தியின் குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக கார்த்தி நடிப்பில் ஆகஸ்ட் மாதம் ‘விருமன்’ படமும் செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் வெளியானது. இந்த இரு படங்களிலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சர்தார் திரைப்படத்தின் டீசர், மற்றும் பாடல்கள் வெளியாகிப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.







