“என் மகனின் 10 ஆண்டுக்கால வாழ்க்கையை வீணடித்து விட்டனர்” – தோனி, கோலி உள்ளிட்டோர் மீது சஞ்சு சாம்சனின் தந்தை குற்றச்சாட்டு!

2015-ம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான சஞ்சு சாம்சனின் 10 ஆண்டுகளை வீணடித்துவிட்டதாக தோனி, கோலி உள்ளிட்டோர் மீது அவரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள்…

2015-ம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான சஞ்சு சாம்சனின் 10 ஆண்டுகளை வீணடித்துவிட்டதாக தோனி, கோலி உள்ளிட்டோர் மீது அவரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறாது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயேன 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் புதிய தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக சதம் அடித்து அசத்தினார்.

இந்நிலையில் தோனி, ரோகித், விராட் கோலி ஆகியோர் என் மகனின் 10 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக சஞ்சு சாம்சனின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

இதையும் படியுங்கள் : UttarPradesh | இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவரின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவன்!

அப்போது பேசிய அவர் கூறியதாவது :

” என் மகனின் 10 ஆண்டுகால வாழ்க்கையை 3 கேப்டன்களான தோனி, விராட் கோலி, ரோகித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் வீணடித்து விட்டனர். இந்த நெருக்கடியிலும் சஞ்சு வலுவாக வெளிவந்தார். இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இவர்கள் மட்டும் இப்போது வரவில்லையென்றால், முன்பை போலவே சஞ்சுவை நீக்கியிருப்பார்கள்”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.