நாளை வெளியாகிறது #NirangalMoondru படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறங்கள் மூன்று’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ நாளை மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கார்த்திக் நரேன்.…

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறங்கள் மூன்று’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ நாளை மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கார்த்திக் நரேன். இவர் தற்போது ‘நிறங்கள் மூன்று’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் அதர்வா, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள் :

சுஜித் சாரங்கின் உதவியாளர் டிஜோ டாமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி கவனம் பெற்றது. இத்திரைப்படம் வரும் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதர்வா ‘டி.என்.ஏ’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.