அருட்தந்தையர்கள், மாணவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்

ராசிபுரம் அடுத்த மெட்டாலாவில் செயல்பட்டு வரும் லொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆட்டம் பாட்டம் என பாரம்பரிய உடைகள் அணிந்து சமத்துவ பொங்கல் விழா, மாணவ மாணவிகள் சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கலாச்சாரத்தின்…

ராசிபுரம் அடுத்த மெட்டாலாவில் செயல்பட்டு வரும் லொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆட்டம் பாட்டம் என பாரம்பரிய உடைகள் அணிந்து சமத்துவ பொங்கல் விழா, மாணவ மாணவிகள் சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கலாச்சாரத்தின் தொன்மையைப் போற்றி நித்தம் ஒரு விடையினை தரும் சூரியனை வணங்கி பழையன கழிந்தும், புதியன பிறக்கும் தைத்திருநாள் கொண்டாட்டம் நாடு முழுவதும் வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்படுகிறது. வாசலில் அழகு கோலமிட்டு தைப் பொங்கலை வரவேற்கும் விதமாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆயில்பட்டி பகுதியில் இயங்கி வரும் லொயோலா கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

விழாவில் கல்லூரியின் அருட்தந்தையர்கள், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அலுவலர்கள் மாணவ மாணவிகள் என அனைவரும் ஒன்று கூடி பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது . அப்போது வளம் பெருகட்டும் ,மனம் நிறையட்டும் ,தித்திக்கும் பொங்கல் படைத்து,விவசாயின் மனம் குளிர, மும்மாரி மழை பொழிய, பூமி விளைவதற்கு சாமியாக நிற்கும் சூரியனை வணங்கி, பொங்கல் பொங்கி வரும் பொழுது பொங்கலோ பொங்கல் என கொலவையிட்டு மகிழ்ந்தனர்.லயோலோ கல்லூரியில் நடத்தப்பட்ட, இந்த பாரம்பரிய பொங்கல் விழாவிற்கு சென்னை தமிழர் கலையின் பேராசிரியர் காளீஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தரணியெங்கும் தலைக்கட்டும், மனங்கள் எல்லாம் மகிழ்ச்சி நிறையட்டும்,”பொங்கலோ பொங்கல்” எனக் கூறி கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் சாமுவேல் ஜெயசீலன், கல்லூரியின் செயலர் அருள் முனைவர் ஆல்பர்ட் வில்லியம் மற்றும் இயேசு சபையாளர்கள் என அனைவரும் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகிய அனைவருக்கும் தங்களது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தனர். பொங்கல் விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.